SBI PO 2017 recruitment
இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கியின் துணை வங்கிகளாக ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பைகானர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா போன்ற ஐந்து துணை வங்கிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
பொதுத்துறை வங்கிகளுக்கான பணியிடங்கள் ஐ.பி.பி.எஸ். எனப்படும் பொது எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை நடத்தி தேர்வு செய்து குறிப்பிடத்தக்கது.
தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2,313 புரபேஷனரி ஆபீஸர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயனடைய வேண்டிய நேரமிது.
மொத்த காலியிடங்கள்: 2,313
பணி: புரபேஷனரி ஆபீஸர்
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 1.7.2017ம் தேதிக்கு முன்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களைக் காண்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.04.2017 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.4.1987 - 1.4.1996க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட், டெபிட் மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.
தேர்வுசெய்யடும் முறை: தேர்வானது இரு பிரிவுகளாக இருக்கும். அதாவது பிரிலிமினெரி தேர்வு மற்றும் மெயின் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். முதல் கட்ட தேர்வான பிரிலிமினெரி தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் கட்ட மெயின் தேர்வில் அப்ஜக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் தர்க்கம், கணினி அறிவியல், டேட்டா அனாலிசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து 155 கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டு கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுபவர்கள் பணிக்கான உத்தரவு வழங்கப்படும்.
ஆங்கில மொழித்திறனோடும், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறிவோடும், சரியான வழிகாட்டுதலை கடைப்பிடித்தலும் முறையாக பயிற்சி மேற்கொண்டு முயற்சிப்பவர்களுக்கே வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சம்பளம்: பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் மாதம் ரூ.27,620 வழங்கப்படும். 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020 (Junior
Management Grade Scale-I) + இதர சலுகைகள் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்துப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். இளம் வயதிலேயே பணியில் சேருவோர் பின்னாளில் உயர் பதவிக்குச் செல்லலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://statebankofindia.com/ அல்லது www.sbi.co.in என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முறையாக விவரங்களை பூர்த்தி செய்து முடித்த பின்னர் விண்ணப்பத்தைச் சேமித்த பின்னர் தரப்படும் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் எதிர்கால பயன்பாட்டிற்காக குறித்துவைத்துக் கொள்ளவது நல்லது.
விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தையும் பணம் செலுத்தியதற்கான ஆன்லைன் ரசீதையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2017. காலம் இருக்கிறது என்று காலம்தாழ்த்தாமல் விரைந்து விண்ணப்பித்து முழுமையான முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு முத்தெடுங்கள்.
வாழ்த்துக்கள்...
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/SBI_PO_Rectruitment
Share
& Comment
Tweet