TNPSC அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29 செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III), 49 செயல் அலுவலர் (நிலை- IV) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாகும். இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித் தனியாக விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
& Comment
Tweet