Thursday, November 3, 2016

Tamilnadu Postal Circle Recruitment தபால்துறையில் 310 தபால்காரர் பணியிடங்கள்

Tamilnadu Postal Circle Recruitment

தபால்துறையில் 310 தபால்காரர் பணியிடங்கள்-10-ம் வகுப்பு படிப்பு தகுதி

தபால் துறையில் தபால்காரர் பணிக்கு 310 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்தியாவின் மிகப்பெரிய மத்திய அரசுத் துறைகளில் தபால்துறையும் ஒன்று. இந்திய தபால்துறையின் தமிழ்நாடு தபால் வட்டத்தில் தற்போது தபால்காரர்/ மெயில்கார்டு பணிக்கு 310 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் தபால்காரர் பணிக்கு 304 இடங்களும், மெயில்கார்டு பணிக்கு 6 இடங்களும் உள்ளன. எந்தெந்த டிவிஷனில் எவ்வளவு பணியிடங்கள் உள்ளன என்ற விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் தபால்காரர் பணிக்கும், 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் மெயில் கார்டு பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக் கட்டணம் (ரூ.400), விண்ணப்பக் கட்டணம் (ரூ.100) சேர்த்து மொத்தம் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் 15-11-2016-ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Share

& Comment

 

Copyright © 2015 Employment News

Designed by Templateism. Hosted on Blogger Platform.